உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திரண்ட பக்தர்கள்; தீபம் ஏற்றி வழிபாடு
ADDED :5 days ago
கோவை; புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு,கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் லட்சுமி நரசிம்மர் உற்சவர் ஆகிய தெய்வங்களுக்கு மகா திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து லட்சுமி நரசிம்ம ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து வேத பாராயணங்களும் படிக்கப் பட்டன. புண்ணியம் அள்ளித்தரும் புரட்டாசி சனிக்கிழமை இன்று வழிபடுதல் சிறப்பானதாக கருப்படுவதால் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.