உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ராஜவிநாயகர் கோவிலில் மழை வேண்டி திருவிளக்கு வழிபாடு

திருப்பூர் ராஜவிநாயகர் கோவிலில் மழை வேண்டி திருவிளக்கு வழிபாடு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின், 44வது வார்டு பொதுமக்கள் நலன் வேண்டியும், பருவமழை, தொழில்வளம் வேண்டியும், அ.தி.மு.க. சார்பில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ராஜவீதி, ராஜவிநாயகர் கோவிலில் நடந்த பூஜைக்கு, கவுன்சிலர் கண்ணப்பன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், மாவட்ட செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். பருவமழை பெய்து, தொழில் வளம் சிறக்க வேண்டி பொது பிரார்த்தனையுடன், திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !