உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

சிதம்பரம்: திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் சிதம்பரம் வழியாக பாதயாத்திரையாக சென்றனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை 20ம் தேதி பால்குட விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லத் துவங்கியுள்ளனர். சிதம்பரம் வழியாக செல்லும் பக்தர்களுக்கு சிதம்பரம் பாம்பன் சுவாமிகள் கோவிலில் தேனீர் வழங்கப்பட்டது. இதேபோன்று வழி நெடுகிலும் ஏராளமானோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிலையில், சிதம்பரத்தை சேர்ந்த முருக பக்தர்களின் 45ம் ஆண்டு பாதயாத்திரை நேற்று மாலை துவங்கியது. இவர்கள், நாளை 20ம் தேதி திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கு சென்று, காவடி எடுத்தும், அங்கப்பிரதட்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !