புரட்டாசி முதல் சோமவாரம்; ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1 hours ago
கோவை; புரட்டாசி மாதம் முதல் சோமவார திங்கள் கிழமையை முன்னிட்டு இன்று கோவை ராம் நகர் வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இருக்கும் மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் மூலவர் சிவபெருமான் வெண்ணிற வஸ்திரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சுந்தராபுரம், காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் அமைந்துள்ள கம்பீரவிநாயகர் கோவிலில் இருக்கும் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.