உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு புரட்டாசி சிறப்பு அலங்காரம்

திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு புரட்டாசி சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவத்தில் மூலவர் நேற்று திருமலை சீனுவாச பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  இன்று காலை சுப்ரபாதம், கோபூஜை, தோமாலை சேவையை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை நடைதிறக்கப்பட்டு, சாயரட்சை பூஜை, இரவு ஏகாந்த சேவை நடக்கிறது. விழாவில் உற்சவதாரர் முன்னாள் துணை சேர்மன்  விஜயரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !