உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி இரண்டாம் சனி: கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி இரண்டாம் சனி: கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !