சீனிவாசப்பெருமாள் கோவிலில் இருந்து ஆதிதிருவரங்கத்திற்கு பக்தர்கள் நடைபயணம்
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் சீனுவாசப் பெருமாள் கோவில் பக்தர்கள் ஆதி திருவரங்கம் கோவிலுக்கு நடைபயணம் சென்றனர். நல்லாப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள் கோவிலில் நேற்று காலை 7 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து கோகுல கிருஷ்ண பஜனை குழுவினர் பிரபந்த பாடல்களை பாடினார்கள். பின்னர் சுவாமிகளுக்கு தீபாரதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் பஜனை குழுவினர் கண்டாச்சிபுரம் வழியாக ஆதிதிருவரங்கம் சென்றனர். கண்டாச்சிபுரம் வருகை தந்த பஜனை குழுவினருக்கு மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்ட பஜனை குழுவினர் இன்று மாலை ஆதிதிருவரங்கம் கோவிலில் சுவாமிகளை வழிபாடு செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை நல்லாப்பாளையம் கிராம பொதுமக்களும், சீனிவாச பெருமாள் கோவில் நிர்வாகிகளும் செய்தனர்.