உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் சிவன் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம்

எமனேஸ்வரம் சிவன் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் சிவன் கோயிலில் நடராஜருக்கு புரட்டாசி மாத சதுர்தசி அபிஷேகம் நடந்தது.


எமனேஸ்வரத்தில் பொன்னால் பூன்முலை உமையாள் சமேத எமனேஸ்வரமுடையவர் கோயில் உள்ளது. இங்கு சிவகாமி அம்பாள் நடராஜ மூர்த்தி உற்சவர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 10வது ஆண்டாக புரட்டாசி மாத சதுர்தசி திதி அபிஷேக ஆராதனைகள் நேற்று மாலை நடந்தது. அப்போது பல வகையான திரவியம், பால், தயிர், பன்னீர் ஆகிய அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அபிஷேக குழு சார்பில் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !