உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு புதிய யானை சிவா வந்தது

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு புதிய யானை சிவா வந்தது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சிவா எனும் புதிய யானையை, சென்னை சேவா டிரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது. இதனை கோயில் குருக்கள் மகா தீபாராதனை செய்து வரவேற்றனர்.


ராமேஸ்வரம் கோயிலில் இருந்த பவானி எனும் யானை கோவையில் நடந்த புத்துணர்வில் உயிரிழந்ததும், 2013ல் ராமலட்சுமி எனும் யானையை ராம்கோ குரூப் வழங்கினர். இந்த யானை தற்போது பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை சேவா டிரஸ்ட் சார்பில் புதியதாக சிவா எனும் யானை வழங்கப்பட்டது. நேற்று இரவு 8:30 மணிக்கு லாரியில் வந்திறங்கிய யானை சிவாவை கோயில் குருக்கள் மகா தீபாராதனை செய்து வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் இணை ஆணையர் சுரேஷ், பேஸ்கார் கமலநாதன், சேவா டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் அனுராதா ஆகியோர் பழங்கள் கொடுத்து வரவேற்றுனர்.


இதுகுறித்து அனுராதா கூறியதாவது : உலக நன்மைக்காகவும் பாரம்பரிய முறைப்படி ராமேஸ்வரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மாயவரம் வைத்தீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கு 5 யானைகள் தானமாக வழங்கப்பட்டது. யானை சிவாவுக்கு, 5 வயது 8 மாதங்கள் ஆகிறது. இதனை அசாம் தேசிய விலங்குகள் பூங்காவில் இருந்து வனத்துறை அனுமதியுடன் கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !