உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் பெருமாள், நெய்தீப தரிசனத்தில் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.நேற்று புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏகதின பிரம்மோற்சவம் திருப்பதி திருமலையில் நடைபெறுவது போல் நடந்தது. காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம்; 6:00 மணிக்கு தோமாலை சேவை; 7:00 மணி முதல் 7:40 வரை கொடியேற்றம் நடந்தது. காலை 8:00 மணிக்கு அம்ச வாகன சேவை; 9:00 மணிக்கு சிம்ம வாகனம், 10:00 மணிக்கு அனுமந்த் வாகனம், 11:00 மணிக்கு சேஷ வாகனம், பகல் 12:00 மணிக்கு கருட வாகன சேவையில் உற்சவர் பெருமாள் அருள்பாலித்தார். மாலை, 3:00 மணிக்கு யானை வாகன சேவை; மாலை 4:00 மணிக்கு சூர்ணோற்சவத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி அருள்பாலித்தனர். மாலை 5:00 மணிக்கு குதிரை வாகனம் ; 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவம்; இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடந்தன. இன்று மாலை புஷ்ப யாகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !