உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குட்டை கருப்பராயன் கோயிலில் சுவாமி அழைத்தல் நிகழ்ச்சி

ஆலங்குட்டை கருப்பராயன் கோயிலில் சுவாமி அழைத்தல் நிகழ்ச்சி

தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.


அட்டுக்கல், ஆலங்குட்டை முன்பு, பழமையான கருப்பராயன் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் சுவாமி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கும். இந்தாண்டு, சுவாமி அழைத்தல் நிகழ்ச்சி, தொண்டாமுத்தூர், அம்மன் நகரில் உள்ள விநாயகர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கிருந்து, கரகம் ஜோடித்து, மேளதாளங்களுடன் அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, கருப்பராயனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !