உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டி தோணுகாலில் ஜலவாசம் சிறப்பு பூஜை

காரியாபட்டி தோணுகாலில் ஜலவாசம் சிறப்பு பூஜை

காரியாபட்டி: காரியாபட்டி தோணுகாலில் சிவ சம்போ சங்கராபுரி ஆதீன திருமடா ஆலயம் மடாலயம் சார்பாக ராஜசிம்ம யோக வாராகி அம்மன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள வாராகி அம்மன் சிலைக்கு ஜலவாசம் சிறப்பு பூஜை நடந்தது.

அனைத்து வகையான அபிஷேகங்கள் செய்யப்படடு, சர்வ அலங்காரத்துடன் பூஜைகள் நடத்தப்பட்டது. தவத்திரு சிவ சம்போ சங்கராபுரி ஆதீனம் குரு மகா சன்னிதானம் சிவகிரி நாத லிங்கேஸ்வர ஸ்வாமிகள், கோவை கவுண்டம்பாளையம் தேவி கருமாரி குரு மகா சன்னிதானம் செந்தில்குமார் அடிகளார், நிலையூர் ஆதீனம் தேசிக பிரமாச்சாரியார் சுவாமிகள், நாக புற்று கோயில் நாக சித்தர் சுவாமிகள், குருவித்துறை திருமோகூர் ஸ்ரீதர் பட்டர், திருச்சி அள்ளூர் பிரகாஷ் சுவாமிகள் திருப்பணிக்குழு தலைவர் ஈஸ்வரன், அசேபா இயக்குநர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !