உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விழுப்புரம்: 


விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


விழுப்புரம், பெருமாள் கோவில் தெருவில், கோட்டை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை யொட்டி, காலை 6:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திண்டிவனம் 


திண்டிவனம் அருகே உள்ள தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.


இதை முன்னிட்டு விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால், மகா அபிஷேகம் நேற்று காலை நடந்தது. தொடர்ந்து யாகசாலை வேள்வி நடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த பின்னர், 108 சங்காபிஷேகம் மற்றும் கலச நீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து,வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி விஷ்ணு கணபதியாக அருள்பாலித்தார். பின்னர் உட்பிரகாரத்தில் உலா வந்து , ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

திருவாடானை: 


திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகர், பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பக விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி மற்றும் கிராமங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.


விநாயகருக்கு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

செம்பட்டி: 


சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.-


நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூமாலைகள் சாற்றப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.

வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோயில், அய்யாபட்டி மாணிக்க விநாயகர் கோயில், கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் வலம்புரி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

வடமதுரை : 


வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு மடத்துக்கடை செல்வவிநாயகர், மேற்குரத வீதி சித்தி முக்தி விநாயகர், மங்கம்மாள் கேணி விநாயகர், தென்னம்பட்டி ஊர்மந்தை விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !