உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்பெண்ணை ஆற்றில் சோழர்கால லிங்கம் கண்டெடுப்பு

தென்பெண்ணை ஆற்றில் சோழர்கால லிங்கம் கண்டெடுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சோழர்கால லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் தென்பெண்னை ஆற்றங்கரையில் இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது, அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் ருத்ர லிங்கத்தின் பாகம் இருந்தது கண்டெடுக்கப்பட்டது. லிங்கத்தை இளைஞர்கள் எடுத்துவந்து ஆற்றங்கரையோரம் உள்ள சிவன் கோவிலில் வைத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் சிவலிங்க வழிபாடு சோழர் காலத்திலிருந்திலிருந்து இருந்து வருவதால், இந்த லிங்கம் சோழர் காலத்தை சேர்ந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறினர்.

மேலும், லிங்கத்திற்கு முக்கியமாக விஷ்ணு பாகம், ஆவுடை பாகம் இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் ருத்ர பாகம் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் விஷ்ணு மற்றும் ஆவுடைபாகத்தோடு லிங்கத்தை வைத்து வழிபாடு செய்ய கிராம மக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !