/
கோயில்கள் செய்திகள் / தெக்கலூர் சேற்று மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா; கம்பம் விடுதல் நிகழ்ச்சி
தெக்கலூர் சேற்று மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா; கம்பம் விடுதல் நிகழ்ச்சி
ADDED :2 days ago
தெக்கலூர்: தெக்கலூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த தெக்கலூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவிலில் கடந்த 22ம் தேதி பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. அதன் தொடர்ச்சியாக கம்பம் சுற்றி ஆடுதல், பூவோடு எடுத்தல்,காவடி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று பூச்சாட்டு விழாவில் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் அழைத்தல், மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல், கம்பம் பிடுங்கி கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தெக்கலூர் கிராம கொங்கு இளைஞர்கள் மற்றும் எம்ஆர் டெக்ஸ் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.