உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயிலில் பொங்கல், முளைப்பாரி விழா

முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயிலில் பொங்கல், முளைப்பாரி விழா

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் நகர் செல்லிஅம்மன் கோயில் பொங்கல், முளைப்பாரி விழா இன்று நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புகட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது. ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர். பொங்கல் பெட்டி ஊர்வலமாக தூக்கி சென்று கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி தூக்கி பஜார்,அய்யனார் கோயில், செல்லிஅம்மன் கோயில் உட்பட முக்கிய வீதியில் ஊர்வலமாக தூக்கி சென்று தண்ணீரில் கரைத்தனர். கலைநிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !