சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஆஸ்தான வித்வான் காலமானார்
ADDED :12 hours ago
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஆஸ்தான வித்வான் தாரமங்கலம் சுப்பிரமணிய சாஸ்திரிகள் தமது 91வது வயதில் பெங்களூரில் காலமானார். இவர் பாட்டனார் காலம் முதல் ஐந்து பீடாதிபதிகளின் அனுக்கிரஹத்துக்கு பாத்திரமாகிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைத சித்தாந்தங்களையும் முறையே தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார், ரகோத்தமாச்சாரியார் ஆகியோரிடம் பயின்றார். தமிழ், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் டாக்டர் பட்டம் பெற்றவர்.