ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் பிரம்மாண்டமான கொலு வழிபாடு
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரி பிரம்மாண்டமான கொலு பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டு துர்கா லட்சுமி சரஸ்வதி முப்பெரும் தேவியர்களுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் மற்றும் கோவில்களில் பொம்மை கொலுகண்காட்சி நடைபெறும் கொலுபொம்மை வைப்பதால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது 9நாட்களும் வீடுகளில் கொலு பொம்மை வைத்து அருகில் உள்ள பொது மக்களை வீடுகளுக்கு வரவழைத்து பக்தி பாடல்கள் பாடி பிரசாதம் கொடுக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது இதையொட்டி கோவை கோவில்களில் கொலு பொம்மை கண்காட்சி நடைபெறுகிறது கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் தினமும் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் ஆகியன வழங்கப்படுகிறது நிறைவு நாளான விஜயதசமி அன்று குழந்தைகள் முதன் முதலாக அ அக்ஷயம் நெல்மணிகளால் தங்கள் தாய், தந்தை மடியில் அமர்ந்து எழுதும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது நவராத்திரி பண்டிகையை யொட்டி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பொம்மை கொலு கண்காட்சி மற்றும் முப்பெரும் தேவியர்களை தரிசனம் செய்து வருகின்றனர்.