உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மசினியம்மன் தசரா தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மசினியம்மன் தசரா தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கூடலூர்: முதுமலை அருகே உள்ள மசினகுடி, மசினியம்மன் கோவிலில் தசரா தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் அமைந்துள்ளது பழமையான மசினியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தசரா பண்டிகை பாரம்பரிய முறையில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நடப்பாண்டுக்கான தசரா திருவிழா, நேற்று முன்தினம், காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தசரா விழாவை முன்னிட்டு மசினியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, மாலை இருளர் பழங்குடியினர் மற்றும் மசினகுடி மாயார் மக்கள், மாயார் கிராமத்துக்கு சென்று மசினியம்மனின் சகோதரியான சிக்கம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மசினியம்மன் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்து. இதற்கான ஊர்வலம் மாலை 4:00 மணிக்கு மாயாரில் துவங்கியது. பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய இசையுடன், பக்தி பாடல்கள் பாடி, மாயார் - மசினகுடி சாலை வழியாக, சிக்கம்மனை, ஊர்வலமாக அழைத்து வந்தனர். மசினகுடி வந்த சிக்கம்மனுக்கு மசினகுடியில் பக்தர்கள் சிறப்பு பூஜையுடன் வரவேற்றனர். இரவு 9:00 மணிக்கு மசினியம்மன் கோவிலை வந்தடைந்த சிக்கம்மனுக்கு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 9 நாட்களுக்கு மசினியம்மன் தங்கைகளாக வணங்கப்படும்

ஸ்ரீ சிக்கமன், தொட்டம்மன், தண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 20ம் தேதி, ஸ்ரீசிக்கம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !