உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜை

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் பசு, கன்றுக்கு சிறப்பு பூஜையும், விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. குமார் சர்மா பூஜைகளை செய்து வைத்தார். வாசவி வனிதா கிளப் நிர்வாகிகள் ராஜேஷ் முன்னாள் நிர்வாகிகள் வேல்மணி மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !