உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லனுர் சக்தி மாகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை

செல்லனுர் சக்தி மாகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை

அன்னூர்: செல்லனுர் சக்தி மாகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது.


அன்னூர் அருகே, செல்லனுர் சக்தி மாகாளியம்மன் கோயிலில் பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 2ம் தேதி முதல் மண்டல பூஜை தினமும் இரவு நடைபெறுகிறது. நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு சக்தி மாகாளியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அலங்கார பூஜை நடந்தது. செல்வ விநாயகர், கல்யாண சுப்பிரமணியசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற 12ம் தேதி மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !