பெருமாள் கோயில் நாக பஞ்சமி விழா
ADDED :57 minutes ago
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் நாக பஞ்சமி விழா நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் சேஷ வாகனத்தில் ஏகாந்த சேவையில் எழுந்தருளினார். இதே போல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் வலம் வந்தார். இரவு பாகவதர்களின் பக்தி பஜனை நடந்தது. தொடர்ந்து தீபாராதனைகள் செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.