உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்பாத்தி கோவில் தேர்த்திருவிழா: மகா கணபதி தேரில் திருவீதி உலா

கல்பாத்தி கோவில் தேர்த்திருவிழா: மகா கணபதி தேரில் திருவீதி உலா

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், கல்பாத்தியில் உள்ள, விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்த்திருவிழாவில், மந்தக்கரை மகா கணபதி கோவில் தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது.


கல்பாத்தி தேர்த்திருவிழாவின் முதல் நாளில், விசாலாட்சி சமேத விஸ்வ நாதர் சுவாமி, வள்ளி, தேவ சேனா சமேத சுப்ரமணியர், கணபதி சுவாமிகள் அலங் கரிக்கப்பட்ட திருத்தேரில் மகா கணபதி தேரில் திருவீதி உலா எழுந்தருளி, நான்கு வீதிக ளிலும் உலா வந்து அருள் பாலித்தனர். இரண்டாம் திருநாளான இன்று மந்தக்கரை மகா கணபதி கோவிலில், காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு ருத்ராபிஷேகம், 9:00 மணிக்கு வேத பாராயணம் நடந்தது. தொடர்ந்து உற்சவமூர்த்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலுக்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. அதன்பின், செண்டை மேளம் முழங்க, சுவாமி திருவீதி உலா நடந்தது. பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. மகா கணபதிக்கு ஜெய், மந்தக்கரை மகா கணபதிக்கு ஜெய் என கோஷத்துடன், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில் தேரோட்டம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, கல்பாத்தி விசா லாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, ஆறு கோவில் தேர்கள் சங்கமம் நடக்கிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !