நத்தம் மாரியம்மன் கோயில் விழா!
ADDED :4624 days ago
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு நேர்த்திக்கடனுக்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தன்மலை தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள பல நூற்றாண்டு புகழ்மிக்க மாரியம்மன் கோயிலில், மாசித்திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள், பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல், அக்னிசட்டி எடுத்தல், கரும்புதொட்டில் கட்டுதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்த, கரந்தன்மலை கன்னிமார் கோயில் அருவியில் நீராடி, தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலம் வந்தனர்.அந்த தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டனர்.