உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் தமிழக அரசின் தகவல் மையம்: 24 மணி நேரமும் செயல்படும்

சபரிமலையில் தமிழக அரசின் தகவல் மையம்: 24 மணி நேரமும் செயல்படும்

சென்னை: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்களை, தமிழக அரசு அமைத்துள்ளது.


இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை, மகரவிளக்கு ஜோதி திருவிழா நடக்க உள்ளன. இதையொட்டி சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்களுக்கு உதவ, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம், மாநில எல்லையான கன்னியாகுமரி களியக்காவிளை, சபரிமலை ஆகிய இடங்களில், 24 மணிநேரம் செயல்படும், தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் மையங்கள், 2027 ஜன.,20 ம் தேதி வரை செயல்படும். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை 18004251757 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். களியக்காவிளையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை, 98944433179, 8760668834, 9486270443 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். சபரிமலையில் செயல்படும் தகவல் மையத்தை, 6385806900, 7094906442 என்ற மொபைல் போன் எண்களில், தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !