திருமலையில் ரத சப்தமி உற்சவம்!
ADDED :4671 days ago
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள், ரத சப்தமி உற்சவ விழா கோலாகலமாக நடந்தது. திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், சூரிய ஜெயந்தியை ஒட்டி, ரத சப்தமி உற்சவம் நடந்தது. அதிகாலை முதல் இரவு, 10:00 மணி வரை மலையப்ப சாமி, சப்த(ஏழு) வாகன சேவையில், திருமலை மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலையப்ப சாமியை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். வார விடுமுறை மற்றும் ரத சப்தமியை ஒட்டி, இரண்டு நாட்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.