உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தத்தில் இன்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி

நத்தத்தில் இன்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று பக்தர்கள் அக்னிசட்டியெடுத்தல், மதியம் 2மணிக்கு வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் பூக்குழி இறங்குதல் ஆகிய விஷேசங்கள் நடக்கின்றன.நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா, இந்தாண்டு கடந்த பிப். 12ல் கரந்தன்மலை தீர்த்தக்குடம் எடுத்து வந்து,. காப்புக்கட் டினர். தினமும் பால்குடம், கரும்புத்தொட்டில் எடுத்தல், பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், அலங்கரிக்கப் பட்டபல்லக்கில் நகர் வலம்வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 5 மணி முதல் பக்தர்கள் அக்னிசட்டியெடுத்தல் நடக்கிறது. மதியம் 2 மணியளவில் வழுக்கு மரம்ஏறுதல் அதன் பின் பூக்குழி இறங்குதல், கம்பம் அம்மன் குளத்தில் இறக்கிவிடுதல் ஆகியவை நடக்கிறது. தக்கார் அறிவழகன், கோயில் பரம்பரை பூசாரிகள் சொக்கையா, சின்னராசு, சுப்புராசு, நடராசு ஆகியோர்ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !