மனசு சரியில்லையா?
ADDED :4994 days ago
மனசே சரியில்லை என்று வருந்துவோருக்கு ஒரு இனிப்பான செய்தி. நவக்கிரகங்களில் மனதைக் கட்டுபடுத்துபவராக இருப்பவர் சந்திரன். அவருக்கு இந்து என்றும் பெயருண்டு. இந்து வழிபட்ட பெருமாளே பரிமளரங்கனாக திருஇந்தளூரில் காட்சி தருகிறார். தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் மணந்து கொண்டான். அவர்களில் ரோகிணியின் மீது மட்டும் அன்பு செலுத்தவே, மற்ற பெண்கள் தந்தையிடம் வருத்தம் தெரிவித்தனர். கோபமடைந்த தட்சன், தன் மருமகனுக்கு காசநோய் பீடிக்கும்படி சாபமிட்டான். இதையடுத்து மகாவிஷ்ணுவை வேண்டி தவமிருந்த சந்திரன் நோய்நீங்கப் பெற்றான். அவர் தனக்கு அருள்புரிந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டான். சந்திரனுக்குரிய திங்கட்கிழமை, பவுர்ணமி நாளில் பரிமளரங்கரை வழிபட்டால் மனசே சரியில்லை என்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும்.