உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விலகிய சொந்தம் வர ..

விலகிய சொந்தம் வர ..

பாட்டிகள் காதில் பாம்படம் அணியும்போது கொப்பு என்னும் சிறு ஆபரணத்தையும் அணிந்தனர். அந்த ஆபரணத்தின் பெயரால், கொப்புடைய நாயகி என்ற அம்பிகை, காரைக்குடியில் வீற்றுஇருக்கிறாள். வைரக் கொப்பாத்தாள் என்று இவளுக்கு பெயருண்டு. இக்கோயிலில் மூலவருக்கு விக்ரகம் கிடையாது.  மூலவரும் உற்சவரும் ஒன்றாகவே உள்ளனர். 4 கரங்களோடு சூலம், பாசம், கபாலம், அபயமுத்திரை காட்டி காட்சி தரும் இந்த அம்பிகையை வழிபட்டால் விலகிப் போன சொந்த பந்தம் நம்மைத் தேடிவருவர். கொப்பு என்பதற்கு கிளை, உறவு என்ற பொருளும் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !