உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீறில்லா நெற்றி பாழ்! நெய்யில்லா உண்டி பாழ்! என்பதன் பொருள்!

நீறில்லா நெற்றி பாழ்! நெய்யில்லா உண்டி பாழ்! என்பதன் பொருள்!

திருநீறு இல்லாத நெற்றியும், நெய் சேர்க்காத உணவும் வீண் என்கிறார் அவ்வையார். திருநீறுக்கு விபூதி என்று ஒரு பெயருண்டு. உயர்ந்த செல்வம் என்பது இதன் பொருள். கடவுளை நன்றியுணர்வோடு வணங்குவதன் அடையாளமாக தான் திருநீறு இட்டுக் கொள்கிறோம். இதன் பெருமையை திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தில் 11 பாடல்களில் போற்றுகிறார். மேனியெங்கும் பால் வெண்ணீறைப் பூசியிருப்பதாக சிவனை தேவாரம் போற்றுகிறது. பூசுகின்ற நம் உள்ளமும் வெண்மையோடு இருக்க அம்மையப்பனை வணங்குவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !