திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்கிறார்களே!
ADDED :4994 days ago
உலகியல் வாழ்விலே இதற்கு ஆயிரம் உதாரணம் இருக்கிறது. காதலியை நினைத்த அளவில் மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கிறது. அவளை நேரில் கண்டால் ஆனந்தத்தை சொல்லவா வேண்டும்? அண்ணாமலையை நினைத்தால் மட்டும் போதாது. தரிசிப்பதும் அவசியம். ஆயிரமாயிரம் அருளாளர்கள் தவம் செய்த தவபூமி. எங்கிருந்தாலும் மனதால் நினைத்தவரைத் தொடவல்லது அண்ணாமலையானின் அருட்சக்தியாகும். காந்தம் பட்ட இரும்பு போல, அருளாளர்களை ஈர்க்கும் தவ ஆற்றலே அண்ணாமலை நாதராக வீற்றிருக்கிறார். அண்ணாமலையை மனதால் நினைத்தும், வாயால் புகழ்ந்தும், உடலால் வணங்கியும் பயன் பெறுங்கள்.