மாரியம்மன் கோவில் திருவிழா கோத்தகிரியில் கோலாகலம்
ADDED :4674 days ago
கோத்தகிரி: கோத்தகிரி கடைகம்பட்டி கன்னிமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, 25ம் தேதி மாலை 4.00 மணிக்கு, மரம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது. 26ம் தேதி காலை 11:00 மணிக்கு கரக ஊர்வலமும், மாலை 4:30 மணிக்கு, பூகுண்டம் நடந்தது. தொடர்ந்து, பஜனை, ஆடல் பாடல் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. விழாவில், கடைக்கம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் மற்றும் பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்ததனர்.