பிரானூர் பார்டர் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
தென்காசி: பிரானூர் பார்டர் விநாயகர், அரசநங்கை, முப்பிடாதி அம்மன் கோயிலகளில் கும்பாபிஷேகம் நடந்தது.செங்கோட்டையை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் விநாயகர், அரச நங்கை மற்றும் முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் எழுப்பபட்ட விநாயகர் கோயிலில் விமானம் இல்லாமல் இருந்து வந்தது. தமிழக அரசு கூடுதல் தலைமை வக்கீல் கோமதிநாயகம் ஏற்படாட்டில் விமானம் எழுப்பப்பட்டுள்ளது. திருப்பணிகளை தொடர்ந்து கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் கணபதி ஹோமம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து விநாயகர், அரச நங்ககை மற்றும் முப்பிடாதி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா அபிகேஷம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.