உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி விழா துவக்கம்

தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி விழா துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள, தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ திருவிழா ஏப்.,2ல் துவங்குகிறது. அன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மன் புறப்பட்டு, இரவு தங்கி, மறுநாள் கொடிபட்டம் பெற்று, கோயிலுக்கு அம்மன் திரும்புகிறார். அன்றிரவு 11 மணிக்கு, கொடியேற்றம் நடக்கிறது. தினமும் இரவு 7 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளத்தை சுற்றி அம்மன் உலா வருகிறார். இரவு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஏப்.,8ல் மாலை 5 மணிக்கு, திருவிளக்கு பூஜை, ஏப்.,10ல் பூப்பல்லாக்கு, தீச்சட்டி பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,12ல், தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !