உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், கடந்த மாதம், 17ம் தேதி துவங்கி 30ம் தேதி, நிறைவு பெற்றது. நிறைவு விழா அன்று, 108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. விடயாற்றி உற்சவமாக, புஷ்ப பல்லக்கு மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, நேற்று முன்தினம் இரவு, நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், கணபதி ஆகியோர், தனித்தனி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளை வலம் வந்தனர். கச்சபேஸ்வரர் கோவில் அருகே, வானவேடிக்கை நடந்தது. அப்போது, விண்ணை நோக்கி பறந்த வானவெடி, தவறி பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து வெடித்தது. இதில், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !