உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது

மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது

சின்னசேலம்: சின்னசேலம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், மாரியம்மன், முருகன், காத்தவராயன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையும், முதல் கால பூஜையும் நடந்தது. நேற்று இரண்டாம் கால பூஜை, 8 மணிக்கு விநாயகர், மாரியம்மன், முருகன், காத்தவராயன் சுவாமி கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து, மகாதீபாராதனை, சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. பின் அன்னதானமும், சாகை வார்த்தலும் நடந்தது. இரவு மாரியம்மன், எல்லையம்மன், விநாயகர், முருகன், பெரியநாயகி, காத்தவராயன் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !