திந்திரிணீஸ்வரர் கோவில் அதிகார நந்தி உற்சவம்
ADDED :4635 days ago
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் அதிகார நந்தி உற்சவம் நடந்தது. திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. நேற்று காலை அதிகார நந்தியில், அம்மையப்பர் விநாயக பெருமானுக்கு ஞானப்பழம் வழங்கி அருளிய திருக்காட்சி அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.