மகரம்: விட்டதைப் பெறலாம்!
தன்னை உணர்ந்து பிறரையும் நல்வழி நடத்தும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன்சனி நட்பு கிரகமான ராகுவுடன் ராசிக்கு பத்தாம் இடத்தில் அனுகூலக் குறைவாக உள்ளார். புதனின் ஆறாம் இட அமர்வு சிறப்பாக உள்ளது. மாத முற்பகுதி நாட்களில் குருவும் சுக்கிரனும் தாராள அளவில் நற்பலன் வழங்குகின்றனர். வெகுநாள் கவனிக்காமல் விட்ட வருமானத்திற்கான செயல் ஒன்றை நிறைவேற்ற முயற்சி எடுப்பீர்கள். அது தெய்வ அருளால் நடந்தேறும். வாகனத்தில் தகுந்த பராமரிப்பு பணி புரிவதால் பயணமுறை எளிதாக இருக்கும். புத்திரர்களின் சேர்க்கை சகவாசம் அறிந்து இனிய அணுகுமுறையால் நல்வழி நடத்துவது அவசியம்.உடல்நலம் சிறப்பாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் நடந்துகொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை சீராக இருக்கும். நண்பர்களின் சொந்த விவகாரங்களில் அவர்களின் விருப்பம் இன்றி எவ்விதமான ஆலோசனையும் சொல்ல வேண்டாம்.தொழிலதிபர்கள் இப்போது இருக்கிற தொழிலில் கவனம் செலுத்தினாலே போதும். அனுபவம் இல்லாத புதிய தொழில்களில் கூட்டுசேர வரும் அழைப்புக்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் கூடுமானவரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பதால், பணஓட்டத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிற அளவில் பணிபுரிவர். தாமதமான சலுகைகள் வந்துசேரும்.பெண்கள் கணவரின் கருத்துக்களை ஏற்பதால் ஒற்றுமை சீராகும். வீட்டுச்செலவுக்கு தேவையான பணம் இருக்கும். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணிகளை முடித்து சலுகைகள் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் நிதிவசதி கிடைத்து மூலதன பற்றாக்குறையை சரிசெய்து கொள்வர். அரசியல்வாதிகள் திட்டங்களை நிறைவேற்றி நன்மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூல், சுமாரான பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரியில் மேல்படிப்புக்கான இடம் கிடைக்கும்.
உஷார் நாள்: 17.5.13 இரவு 12.25- முதல் 20.5.13 காலை 8.15 மற்றும் 14.6.13 காலை 7.58 முதல் நாள் முழுவதும்.
வெற்றி நாள்: ஜூன் 2, 3, 4
நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 2, 3
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.