ரிஷிவந்தியம் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷபூஜை நடந்தது.ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. பலிபீடம் அருகில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனைகள் நடந்தது. உற்சவர் சிலை அலங்கரித்து காளை வாகனத்தில் வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தது.பிரதோஷ முறைப்படி கோவிலை வலம் வந்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். குருக்கள் நாகராஜ், சோமு பூஜைகளை செய்தனர். தியாகதுருகம் அடுத்த புக்குளம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவி லில் நடந்த பிரதோஷ விழா சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்துள்ள தேவபாண் டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்த அபிஷேக ஆராதனை நடந்தது. நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பின்னர் நடந்த மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் தியாகராஜபுரம் லஷ்மிநாராயண பெருமாள் கோவில், கடுவனூர், பாக்கம் சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடந்தது.