சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் தேரோட்டம்
ADDED :4576 days ago
சிவகாசி: சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா 11 நாட்கள் நடந்தது. அம்மன் தினம்பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சூரசம்ஹாரமும், கழுகேற்றம் நடந்தது. பக்தர்கள், கயறு குத்து, அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா நிறைவாக நேற்று, விநயாகர், அம்மன் திருத்தேர்களில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.