உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயில் காணிக்கையாக ரூ.22 லட்சம் வசூல்!

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் காணிக்கையாக ரூ.22 லட்சம் வசூல்!

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக 22 லட்சம் ரூபாய் கிடைத்தது.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள், மாதம் தோறும் திறக்கப்பட்டு, காணிக்கை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்தில் வசூலான காணிக்கை, நேற்று எண்ணப்பட்டது.அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூஜாரி தலைமை வகித்தார். விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, கோயில் செயல்அலுவலர் தனபாலன் முன்னிலை வகித்தனர். பக்தர்கள் காணிக்கையாக, 22 லட்சத்து 69 ஆயிரத்து 443 ரூபாய், 91 கிராம் தங்கம், 136 கிராம் வெள்ளி கிடைத்தது. காணிக்கை கணக்கிடும் பணியில், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !