உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா!

ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா!

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில், வைகாசி திருவிழா, ஜூன் 10 இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடக்கின்றன.ஜூன் 18ல் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல், இரவு வைகை ஆற்றில் அம்மன் எழுந்தருளுதல், இரவு 2 மணிக்கு பூப்பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜூன் 19ல், மதியம் 3 மணிக்கு பூக்குழி திருவிழாவும், இரவு வண்ண கோ ரதத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூன் 25ல், தேரோட்டம், 26ல், இரவு 12 மணிக்கு தீர்த்தவாரி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கும். ஏற்பாடுகளை, தக்கார் செந்தில்குமார், நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !