மாஸ்கோவில் ராமாயணம்!
ADDED :4534 days ago
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், இந்திய கலை பண்பாட்டுத் துறை சார்பாக ராமாயண நாடகம் நடத்தப்பட்டது. ரஷ்ய மொழியில் மக்களுக்கு ராமாயண கதைச் சுருக்கமும், நாடக வசனமும் வழங்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களில் நிறைய குழந்தைகள் இருந்தனர். லட்சுமணன் இட்டிருந்த கோட்டைத் தாண்டி, சீதை ராவணனுக்கு பிச்சையிடும் காட்சிவந்தது. அப்போது அங்கிருந்த குழந்தைகள் இருக்கையை விட்டு எழுந்து விட்டனர். நாடகம் என்பதை மறந்து, சீதா! கோட்டைத் தாண்டாதே! உன்னைக் கடத்திச் செல்ல இந்த ராட்சஷன் வந்திருக்கிறான் என்று கத்தினர். சீதை வேடமிட்டிருந்த பெண் மனம் உருகி விட்டாள். இந்த நிகழ்ச்சி, இனம், மொழி, நாடு ஆகிய எல்லைகளைக் கடந்தது. அன்பு எல்லாருக்கும் பொதுவானது என்பதை உணர்த்துகிறது.