உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசியால் அர்ச்சிக்கும் போது ..

துளசியால் அர்ச்சிக்கும் போது ..

கோயிலிலோ, வீட்டிலோ பெருமாளுக்கு துளசி அணிவிக்கும்போது, தாயே! துளசி மாதா! அமிர்தத்தின் உறைவிடமாகத் திகழ்பவளே! பெருமாளுக்கு உன்னிடத்தில் தான் எவ்வளவு பிரியம்! என்று வாய்விட்டு சொல்லி அர்ப்பணிக்க வேண்டும். துளசிமாலையை இதயத்திற்கு நேராக வைத்து, சுவாமி இந்த துளசி மாலையோடு, பக்திமயமான என் இதயத்தையும் உனக்கு சமர்ப்பிக்கிறேன். எப்போதும் எனக்கு துணைசெய்யம்மா! என்று மானசீகமாக பிரார்த்திக்க வேண்டும். துளசியால் அர்ச்சிக்கும் போது பெருமாளின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும். கண்கள் அவன் திருவடிகளை மட்டுமே காண வேண்டும். இப்படி பிரார்த்திக்கும் போது துளசியை மட்டுமல்ல! பக்தனின் கோரிக்கையையும் முழுமையாக ஏற்று அருள்புரிவார் பெருமாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !