லட்சுமி யார்?
ADDED :4536 days ago
உபன்யாசம், சொற்பொழிவு எங்கு நடந்தாலும் அங்கு இரு பெண்கள் காத்திருப்பார்கள். இருவரும் உடன்பிறந்தவர்கள். மூத்தவள் ஜேஷ்டா(மூதேவி) கருநிறத்தில் தூக்கத்தின் அடையாளமாக இருப்பவள். இளையவள் லட்சுமி. இவளோ சிவந்த நிறத்துடன் பிரகாசத்துடன் இருப்பவள். இவர்கள் இருவரும் தங்களுக்கு தகுதியானவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். பக்தி சிரத்தையோடு விருப்பமாக சொற்பொழிவு கேட்டவருடன் இளையவளான லட்சுமி புறப்படுவாள். அலட்சிய மனப்பான்மையுடன் கொட்டாவி விட்டபடி, உதாசீனம் செய்து கேட்டவர்களுடன் மூத்தவளான ஜேஷ்டா சேர்ந்து கொள்வாள். இனிமேலாவது ஆன்மிக விஷயங்களை அக்கறையுடன் கேட்க முயற்சியுங்கள்.