பாராசரர்
ADDED :4536 days ago
பசுவை எட்டி உதைத்தால் அதற்கு தண்டனையாக நரகத்தில் சித்ரவதை அனுபவிக்க வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி என்னும் நூல். ஆனால், பராசர ஸ்மிருதி என்ற நூல், இந்த பாவத்திற்கு பிராயசித்தம் சொல்கிறது. ஆனால், கடைபிடிப்பதற்கு மிகவும் கடுமையானது.தீர்த்தயாத்திரை சென்று புனித நதிகளில் நீராட வேண்டும். ஊர் திரும்பியதும், தசமி, ஏகாதசி ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து உபவாசம் (உண்ணாவிரதம்) இருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலை ஆறரை மணிக்குள் புளி சேர்க்காத உணவை உண்ண வேண்டும். அன்று மாலை வரை விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். பகலில் ஒரு நிமிடம் கண் அயர்ந்தாலும் விரதபலன் நீங்கிவிடும். இப்படி செய்தால் தான் பசுவை உதைத்த பாவம் நீங்கும். இதன் மூலம், பசுவை உதைக்கவும் வேண்டாம்; பிராயச்சித்தம் தேடவும் வேண்டாம் என்றே பராசர ஸ்மிருதி வலியுறுத்துகிறது.