பிரகலாதன்
ADDED :4537 days ago
சுவாமி தேசிகன் இயற்றிய வரதாராஜ பஞ்சாசத் ஸ்தோத்திரத்தில் இப்போதும் கூட, உலகிலுள்ள பொருட்கள் எல்லாம் கர்ப்ப மயமாக பிரசவிக்காமல் இருக்கிறது, என்று பாடியுள்ளார். அந்த கர்ப்பத்தில் இருப்பவன் யார் தெரியுமா? சர்வ வியாபியாக எங்கும் நிறைந்திருக்கும் நரசிம்மன் தான். இவன் எப்போது பிரசவிப்பான் என்று கேட்டால், அதற்கு இரண்யன் மாதிரி அசுரன் வர வேண்டும்! அவன் மட்டும் வந்தால் போதாது. பக்தியில் உயர்ந்த பிரகலாதன் போன்ற நல்லவர்களும் வர வேண்டும். இப்படி இருவரும் சேரும் போதெல்லாம், நரசிம்மரின் அவதாரம் தொடர்ந்து இப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்கிறார்.