யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் கும்பாபிஷேக நிறைவு விழா!
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், ஒன்பதாம் ஆண்டு மகா கும்பாபிஷேக நிறைவு விழாவின், இரண்டு நாள் நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. காலை, 6:30 மணிக்கு, கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், ஆவகந்தி ஹோமம் நடந்தது. சுவாமிகளின் மூலமந்திர ஜபம், நவக்கிரக ஹோமம், மூலஸ்தானத்திற்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையை அடுத்து, பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை, பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர். மாலை, 4:00 மணிக்கு, மயிலை சற்குருநாதன் ஓதுவார் மற்றும் குழுவினரின் தேவாரம், 5:45 மணிக்கு, ஸ்ரீமதி சாரதா ஸ்ரீகரன் குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தது. இரண்டாம் நாளான, இன்று, காலை, 7:00 மணிக்கு, ஏகாதச ருத்ரம், மகா அபிஷேகம், தீபாராதனை, பக்தர்கள் பஜனை நடக்கின்றன. மாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீமதி சவிதா ஸ்ரீராம் குழுவினரின் அபங்கம் மற்றும் பஜனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, பகவான் வெள்ளி ரதத்தில் ஊர்வலம், ஆரத்தி நடக்கிறது.