உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் திருக்கோவிலில் திருத்தேர் வீதியுலா கோலாகலம்!

கோதண்டராமர் திருக்கோவிலில் திருத்தேர் வீதியுலா கோலாகலம்!

மதுராந்தகம்: மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில், பிரமோற்சவத்தை முன்னிட்டு, திருத்தேர் வீதியுலா கோலாகலமாக நடந்தது. மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள, புகழ்பெற்ற ஏரி காத்த ராமர் எனப்படும், ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில், பிரமோற்சவ விழா, கடந்த 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, தினமும், பல்வேறு வாகனங்களில், உற்சவ பெருமாள் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாளித்தார். நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, திருமஞ்சனமும், இரவு 9:00 மணிக்கு, பெரிய பெருமாள் உற்சவமும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு,  பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்துடன் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 9:00 மணிக்கு, திருத்தேர் வீதியுலா புறப்பாடு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலை 5:00 மணிக்கு, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. நாளை காலை, திருபாஞ்சாடி திருமஞ்சனமும், மாலை, குதிரை வாகனமும், 26ம் தேதி, அள்மேல் பல்லக்கு, மாலை, ஸப்தாபரனம், 27ம்தேதி மாலை, புஷ்ப யாகம், 28ம் தேதி இரவு, புஷ்ப பல்லக்கு உற்சவம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !