நாலாயிர திவ்ய பிரபந்த சேவை
ADDED :4523 days ago
வேலூர்: நாராயணி பீடத்தில், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடந்தது. வேலூர் அடுத்த திருமலைக்கோடி நாராயணி பீடத்தில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் நேற்று பெருமாள், மகா லட்சுமி விக்கிரகத்திற்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை, சக்தி அம்மா தலைமையில் நடந்தது. பின், கள்ளக்குறிச்சி இராமானுஜ கூட பக்த ஜனசபா மற்றும் போளுரைச் சேர்ந்த குலசேகர ஆழ்வார் ராமானுஜ சபையை சேர்ந்த, 43 ஓதுவார்கள் நாலாயிர திவ்ய பிரபந்த சேவையில் ஈடுபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.